இனி
புலம்பாமல் டயல் செய்யுங்கள்!மின்வெட்டு என்றாலே 1912 என்ற எண்ணுக்கு
புகார் தெரிவிக்கலாம்,மொபைலில் இருந்தும் பேசலாம். புகார் தெரிவித்த பிறகு
சரிசெய்து விடுகிறோம் என்று டிமிக்கி கொடுத்துவிடுவார்கள்... தொடர்ந்து
பேசி புகார் தெரிவித்ததற்கு ஆதாரமாகபுகார் எண்ணை மறக்காமல் கேளுங்கள்....
கேட்டால்தான் கொடுப்பார்கள். புகார்தெரிவித்த சில மணி நேரங்களில் உங்கள்
குறைகளை நிவர்த்தி செய்ய வேண்டும். அது மாதிரி மின்வெட்டை
சரிசெய்யாதபட்சத்தில் மாநகரம், நகரம். பஞ்சாயத்து என்ற ஊர்களை பொறுத்து
ஒவ்வொன்றுக்கும்ஒரு சில மணிநேரங்கள் இருக்கிறது அதனை தாண்டியும் ஒன்றும்
சரிசெய்யவில்லையென்றால் மறுபடியும் அழைத்து உங்கள் புகார் எண்ணை தெரிவித்து
மேல்முறையீடு செய்யும்போது மின்சார வாரியம் நுகர்வோருக்கு நஷ்ட ஈடு
வழங்கவேண்டியிருப்பதால், புகார் தெரிவித்து எண்ணை வாங்கிகொண்டாலே உங்கள்
மின்வெட்டு பிரச்னை தீர்ந்த மாதிரிதான்... எல்லோரும் முயற்சி செய்து
பாருங்கள்...
No comments:
Post a Comment