Monday, May 26, 2014

பொன்.ராதாகிருஷ்ணன் கப்பல்துறை மந்திரி ஆகிறார்
--------------------
நரேந்திரமோடி இன்று மாலையில் பிரதமராக பதவி ஏற்கிறார். அவருடன் புதிய மந்திரிகளும் பதவி ஏற்கிறார்கள்.
தமிழகத்தில் வெற்றி பெற்ற ஒரே பா.ஜனதா எம்.பி.யான பொன்.ராதாகிருஷ்ணனுக்கும் மந்திரி பதவி வழங்கப்படுகிறது. மாலையில் நடைபெறும் பதவி ஏற்பு விழாவில் அவரும் பதவி ஏற்கிறார்.
இந்தியாவின் தென்கோடி தொகுதியான கன்னியாகுமரியில் இருந்து வெற்றி பெற்றுள்ள பொன்.ராதாகிருஷ்ணன் ஏற்கனவே வாஜ்பாய் மந்திரி சபையில் 1999 முதல் 2004 வரை இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை மந்திரியாக பதவி வகித்தார்.
மோடி மந்திரி சபையில் பொன்.ராதாகிருஷ்ணனுக்கு கப்பல் துறை வழங்கப்படும் என்று தெரிகிறது.
இது பற்றி பொன்.ராதாகிஷ்ணனிடம் கேட்ட போது, எனக்கு எந்த வித எதிர்பார்ப்பும் இல்லை. இதைப்பற்றியெல்லாம் பிரதமர் நரேந்திரமோடி முடிவு செய்வார். எனது நோக்கமெல்லாம் நம்பிக்கையுடன் தேர்ந்தெடுத்த மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்பது தான் என்றார்.
பிரம்மச்சாரியான பொன்.ராதாகிருஷ்ணன் வக்கீல் பட்டம் பெற்றவர். பல ஆண்டுகளுக்கு முன்பே வக்கீல் தொழிலை உதறி விட்டு இந்து முன்னணி இயக்கத்தில் இணைந்து செயல்பட்டார். ஆர்.எஸ்.எஸ்.சில் பிரசாரகராகவும் பணியாற்றினார்.

No comments:

Post a Comment