Monday, June 30, 2014

உறவுகளே ஒரு புதிர்

 
உறவுகளே ஒரு புதிர்

ஜப்பானியக் கப்பல் ஒன்று நடுக் கடலில் பயணித்துக் கொண்டிருந்தது. சரக்குகளை ஏற்றிச் செல்லும் கார்கோ கப்பல் அது.

கப்பலின் கேப்டன் குளிப்பதற்காக் கப்பலில் இருந்த குளியலறைக்குச் சென்றிருந்தார்.
போனவர் சும்மா போகாமல் தன்னுடைய வைர மோதிரத்தையும், விலை உயர்ந்த ரோலக்ஸ் கைக் கடிகாரத்தையும் கழற்றி, தன்னுடைய மேஜை மேல் வைத்துவிட்டுச் சென்றிருந்தார்.குளியல் முடிந்து திரும்பி வந்தவருக்கு அதிர்ச்சி!

15 நிமிடங்களுக்கு முன்பு, தன் மேஜை மீது வைத்துவிட்டுச் சென்றிருந்த, விலை உயர்ந்த அந்த இரண்டு சாமான்களையும் (பொருட்களையும்) காணவில்லை. அதாவது வைர மோதிரமும், ரோலக்ஸ் கைக் கடிகாரமும் வைத்த இடத்தில் இல்லை. காணாமல் போயிருந்தது.

கேப்டன் பதற்றம் அடையாமல், கப்பலில் தனக்குக் கீழே வேலை பார்ப்பவர்களும், தன் அறைக்கு வந்து போகக்கூடியவர்களுமான தன் உதவியாளர்கள் ஐந்து பேர்களை மட்டும் அழைத்துப் பேசலானார்.
அவருக்கு அவர்கள் மீதுதான் சந்தேகம். அவர்களில் ஒருவர்தான் இந்தக் காரியத்தைச் செய்திருக்க வேண்டும் என்றும் நம்பினார். அதை வெளிப்படுத்தாமல் சாந்தமாகப் பேசினார்.“சென்ற 15 நிமிடங்களில் யார் யார் என்னென்ன வேலை செய்து கொண்டிருந்தீர்கள்?” என்று கேட்டார்.

1. பிலிப்பைன்ஸ் நாட்டைச் சேர்ந்த சமையற்காரர், “நான் கீழ்த் தளத்தில் உள்ள ஃபிரிட்ஜ்கள் இருக்கும் அறையில் பணி செய்து கொண்டிருந்தேன். சமையலுக்குத் தேவையான ஆட்டுக்கறியை வெட்டி எடுத்துக் கொண்டிருந்தேன்.” என்று சொன்னார். அவர் கனமான ஓவர்கோட்டை அணிந்திருந்தார்.

2. அடுத்து வாயைத் திறந்த கப்பலின் பராமரிப்புப் பொறியாளரான இந்தியர் இப்படிச் சொன்னார்: “ஜெனரேட்டர் அறையில் வேலை செய்து கொண்டிருந்தேன்” அவர் கையில் ஒரு டார்ச் லைட் இருந்தது.

3. இலங்கையைச் சேர்ந்த மாலுமி சொன்னார்: “கப்பலின் மேல் தளத்தில், கம்பத்தின் மேல் தலை கீழாகப் பறந்து கொண்டிருந்த கொடியை சரி செய்து, கம்பத்தில் நேராகப் பறக்க விட்டேன். இன்று காலையில் நடந்த தவறைச் சரி செய்தேன்.”

4. இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்தவரும், கப்பலின் தகவல் தொடர்பு அதிகாரியுமான மனிதர் (Radio Officer) இவ்வாறு சொன்னார்:“ இன்னும் 72 மணி நேரத்தில் அடுத்த துறைமுகத்தைச் சென்றடைந்து விடுவோம் என்னும் தகவலை நமது கம்பெனியின் தலைமை அலுவலத்திற்குத் தெரியப்படுத்திக் கொண்டிருந்தேன்.”

5. ஜெர்மனியைச் சேர்ந்த மாலுமி சொன்னார்: “நேற்று இரவு முழுவதும் நான் டூட்டியில் இருந்ததால், எனது அறையில் தூங்கிக்கொண்டிருந்தேன்.”

அந்த ஐவரின் பேச்சையும் கேட்ட கேப்டன், அந்த ஐவரில் யார் பொய் சொல்கிறார் என்பதை உடனே கண்டு பிடித்து விட்டார்.

அத்துடன் நில்லாமல் பொய் சொன்னவனின் கன்னத்தில் ஓங்கி ஒரு அறையையும் விட்டார். அதை எதிர்பார்க்காத அவன் உண்மையை ஒப்புக்கொண்டு, அவர் காலில் விழுந்து மன்னிப்பும் கேட்டுக் கொண்டான். அடுத்த சில நிமிடங்களில் அந்த இரண்டு பொருட்களும் திரும்பி வந்தன!

இப்போது சொல்லுங்கள், அந்த ஐவரில் யார் திருடன்?
கேப்டன் எப்படி அதைக் கண்டு பிடித்தார்?

பதில் தெரிந்தால் சொல்லுங்கள் உறவுகளே..!??
(எப்படி என்றும் குறிப்பிடவும் )

*
*
*
*
விடை : இலங்கை மாலுமி தான் திருடன்!
காரணம் ஜப்பான் நாட்டு கொடி தலைகீழாக இருந்தாலும் ஒரே போல தான் இருக்கும்.

No comments:

Post a Comment