Wednesday, May 21, 2014


எமன் கட்டிவைத்த பாலம்.....

இந்த மரணத்தகவல் தமிழ்நாடு அரசை சென்று சேரும்வரை SHARE செய்வோம்

ஒரேயொருபாலம்,, 810 பேரை சாவடிச்சிருக்கு
அடத்தூ,, சம்மந்தப்பட்டவர்கள் தூக்குமாட்டிக்கிட்டு சாவலாம்....

நெய்வேலி ஆர்ச்சுக்கும் வடலூருக்கும் இடையே உள்ளது கண்ணுதோப்பு பாலம். சென்னை-விக்கிரவாண்டி-தஞ்சாவூர் தேசிய நெடுஞ்சாலையில் உள்ளதால் தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் இப்பாலம் மீது சென்றுவருகின்றன. ஆனால் இப்பாலத்தில் ஒரேநேரத்தில் ஒரு வாகனம்தான் பயணிக்கமுடியும் என்கிற அளவுக்கு மிகவும் குறுகலானது.
அதைவிட கைப்பிடி சுவரே இல்லாத உலக அதிசய பாலம்.

புதுசா இந்த பக்கம் வேகமாக வந்து சுதாரிக்க முடியாமல் நிலைதடுமாறி பரலோகம் சென்றவர்கள் இதுவரை ஏராளம். எனக்கு கிடைத்த தகவல்படி, 1909ல் கட்டப்பட்ட இந்த ஒருவழிபாலத்தில் இதுவரை 2701 விபத்துக்கள் நடந்துள்ளன. அதைவிட அதிர்ச்சியான விஷயம். இவற்றில் நேற்று நடந்த வேன் விபத்து உட்பட உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 810 பேர்..

இந்த ஒரு நூற்றாண்டு அவமான சின்னத்தை தாங்கிப்பிடித்துவரும் சம்மந்தப்பட்ட அதிகாரிகள்,கடலூர் மாவட்ட நிர்வாகம், மக்கள் பிரதிநிதிகள் எல்லோரையும் எவ்வளவு வேண்டுமானாலும் வசைபாடலாம். அதற்குண்டான தகுதி அவர்களுக்குண்டு.

No comments:

Post a Comment