எதற்கெடுத்தாலும் மேற்கேயே பார்த்துக் கொண்டிருந்த
மக்களை – முதல் தடவையாக கிழக்கே
பார்க்க வைத்திருக்கிறார்.
ஜப்பான் விஜயத்தில் – ஒரே கல்லில் இரண்டு மாங்கா
அல்ல – பல மாங்கனிகள்….!!!
இதுவரை எந்த பிரதமரும் செய்யாத ஒரு விஷயம் -
ஒரே பயணத்தில், ஒரே நாட்டிலிருந்து இரண்டு லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு முதலீடு பெறுவது ( இங்கு கவனிக்கப்பட வேண்டிய விஷயம் – இது கடன் அல்ல …. முதலீடு – வெளிநாட்டு மூலதனம் உள்ளே வருகிறது …!) அதுவும் முக்கியமாக infrastructure development -க்காக…
-மும்பை -அஹமதாபாத் புல்லட் ட்ரெயின் – இது அவசியமா என்று கேட்பவர்கள் இருப்பார்கள். ஆனால் எனக்கு தோன்றுவது -
ஐந்து காசு கூட நம்முடைய முதல் கிடையாது .
முழுவதும் அவர்கள் முதலீடு.
ஜப்பானிய தொழில் நுட்பம் (டெக்னாலஜி) நமக்கு
பரிச்சயமாகிறது. ஆயிரக்கணக்கில் நமது இஞ்சினீரிங்
பட்டதாரிகளுக்கும், ஸ்கில்டு தொழிலாளர்களுக்கும் வேலை கற்றுக் கொள்ளவும், செய்யவும் – வாய்ப்பு உருவாகிறது……
அடுத்து – ஸ்மார்ட் சிடி -க்களுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம். ஜப்பானிய முதலீடு.
அடுத்து – ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக மக்கள் தொடர்ந்து வசித்துக் கொண்டிருக்கும் உலகின் ஒரே புராதன நகரம் வாரணாசி. அதன் தொன்மையும், பெருமையும் மாறாமல் – புதுமைப்படுத்த வாரணாசி-க்யோடோ ஒப்பந்தம்.
இதில் மிக முக்கியமான விஷயம் – இதெல்லாம் வழக்கம் போல் காகித ஒப்பந்தகளாக நின்று விடாமல், விரைவாகச் செயல்படுத்த பிரதமர் அலுவலகத்திலேயே ஒரு தனி டீம் உருவாக்கப்படுகிறது…அதில் இரண்டு ஜப்பானிய பிரதிநிதிகளும் சேர்க்கப்படுவார்கள் ….!!!
வெளிப்படையாகச் சொல்லப்படாமல் - செயல்படுத்தப்படும் இன்னொரு மிக முக்கியமான விஷயம் - சீனாவின் அத்துமீறல்களுக்கு – இந்தியா-ஜப்பானிடையே ஏற்படும் புதிய நெருக்கமும், ஒத்துழைப்பும் ஒரு முடிவுகட்டும்.
இந்தியா, ஜப்பான் ஆகிய இரண்டு நாடுகளும் இணைந்து ஒரு பலமிக்க சக்தியாக உருவாவது, கிழக்காசியா பகுதியில் சீனாவின் ஆதிக்கத்தை கட்டுக்குள் கொண்டு வரும்.
No comments:
Post a Comment