Progressive India - RUPAY - India's first own payment gateway - Even developed countries doesn't have like this. இன்று இந்தியாவில் இன்னொரு பெரிய சாதனையை ஆரம்பிக்கிறது. அது தான் "ரூபே" என்னும் 100 சதவிகித இந்திய பேமென்ட் கேட்வேயை ஆரம்பித்திருக்கின்றனர். இது என்ன?
உலகின் நெ 1 - பேமென்ட் கேட் வே - விஸா மற்றூம் மாஸ்டர்கார்ட் என்னும் இரண்டு ஜாம்பவான்கள் தான் 230 நாடுகளை ஆட்டுவித்து கொண்டு இருக்கின்றன. இவர்கள் யார்?
எந்த ஒரு கிரடிட் கார்ட் எந்த வங்கி கொடுத்தாலும் - அந்த கார்டின் பயன் மற்ற வங்கிகள் / மற்ற ஏடிஎம்கள் / மற்ற நாடுகளின் வேலை செய்ய ஒரு காமன் பிளாட்ஃபார்ம் தேவைப்பட்டது. அப்போது தான் இந்த இரண்டு ஜாம்பவான்கள் உலகத்தை ஆட்டுவிக்க ஆரம்பித்து கடைசியில் வங்கி கணக்குக்கு கூட இந்த விஸா / மாஸ்டர் கார்ட் பிளாட்ஃபார்ம் தேவைபட்டது. இதனால் நீங்கள் செலவு செய்யும் ஒவ்வொரு காசுக்கும் ஒரு தொகை இந்த அண்ணிய கம்பெனிகளுக்கு போய் சேரும். இதனால் தான் நிறைய இடங்களில் கிரடிட் கார்ட் / டெபிட் கார்ட்னா 2 - 5% எக்ஸ்ட்ரா சார்னு தலை சொறியும் அண்ணாச்சிகளின் பிரச்சினை நீங்கள் கிரடிட் / டெபிட்டில் வாங்கும் போது அதற்க்கு 1.75% முதல் 3% சதவிகிதம் வரை கமிஷனாக இந்த விஸா மாஸ்டருக்கு செல்வதனால் தான். அது போக டெபிட் கார்ட்டுக்கு வருஷா வருஷம் சந்தா தொகை அல்லது மற்ற வங்கிகளில் பணம் எடுக்க காசு என இந்த கருமம் எல்லாம் இந்த ரென்டு ஜாம்பவான்களால் தான். இனிமே அந்த தொல்லை இருக்காது என்றாலும் இந்த ரூபே - 5 ஸ்டேஜ் ரீச் ஆக இன்னும் 3-5 வருஷம் ஆகலாம். இதன் மூலம் ஒவ்வொரு ரூபாயும் ரிஸர்வ் வங்கிக்குள்ளே இருக்கும். சர்வீஸ் சார்ஜ் இருக்காது. அனைத்து ஏடிஎம்களிலும் எவ்வளவு தடவை வேண்டுமானாலும் இலவசமாக சர்வீஸ் சார்ஜ் இல்லாமல் பணம் எடுக்க இயலும். என்னதான் அரசுடைமை வங்கிகள் ஆனாலும் அவர்களும் விஸா மாஸ்டர் தயவு இல்லாமல் டெபிட் / கிரடிட் கார்ட் கொடுக்க முடியாமல் இருந்த காரணத்தினால் தான் மினிமம் அமவுன்ட் வேணும் அக்கவுன்ட் திறக்க மற்றும் பேலன்ஸ் மெயின்ட்டன் பண்ன வேண்டிய கட்டாயம்.நன்கு முன்னேறிய நாடுகளில் கூட இந்த சொந்த பேமென்ட் கேட்வே இல்லை என்பது தான் உண்மை.
இனிமே இன்னையில் இருந்து "பிரதான் மந்திரி ஜன் தான் யோஜனா" என்னும் திட்டத்தின் மூலம் இலவச வங்கி அக்கவுன்ட் திறக்க இயலும் வெறும் ஆதார் அட்டை மட்டும் போதும். அக்கவுன்ட் திறக்க பணம் தேவையில்லை. அது போக சராசரி அக்கவுன்ட் ஆப்பர்ரேஷன் இருந்தால் மினிமம் பேலன்ஸ் மெயின்ட்டன் செய்ய தேவையில்லை. முக்கியமாக ஒரு லட்ச ரூபாய் இலவச காப்பீடு உண்டு. இது வங்கி அல்லது உங்கள் ஊரில் உள்ள சிறப்பு முகாம் மூலம் வங்கி கணக்கு தொடங்கமுடியும். எல்லா இந்தியரும் ஒரு கணக்கு துவங்கவே இந்த ஏற்ப்பாடு. இந்த இலவச வங்கி கணக்கு மூலம் ரூபே டெபிட் கார்ட் இலவசமாக பெற்றூ அனைத்தூ இந்திய ஏடிஎம்கள் / டெபிட் கார்ட் பர்ச்சேஷ் / மற்றூம் ஆன்லைன் வர்த்தகமும் பெற முடியும். இன்று மட்டும் 70,000 - 1 லட்சம் கணக்குகள் திறக்க டார்கெட் ஃபிக்ஸ் பண்ணிருக்காங்க. இந்த தகவல் உங்களுக்கு ப்டித்திருந்தால் பகிரவும்.
No comments:
Post a Comment