"ஜெயலலிதாவை விடுதலை செய்யக்கோரி கல்லூரி மாணவர்கள் போராட்டம்."
"ஜெ. தீர்ப்புக்கு எதிராக தமிழ்த் திரையுலகினர் மவுன உண்ணாவிரதம் போராட்டம்."
எதற்கான போராட்டம் எ
ன்று அடிப்படை புரிதல் கூட இல்லாத போரட்டமா மாணவர்களின் போராட்டமும், திரைப்படத் துறையினரின் போராட்டமும்?
ஜெயலலிதாவின் சட்டத்திற்கு புறம்பான சொத்துக் குவிப்புகளுக்கான ஆதாரங்களோடு வெளியான தீர்ப்புக்கு எதிரான ஓர் போராட்டம் என்றால்,
இவர்களின் போராட்டங்கள் நீதிக்கு எதிரான போராட்டமா? ஊழலுக்கு ஆதரவான போராட்டமா? அதிகாரத்தின் அராஜகத்தை வரவேற்கும் போராட்டமா?
மக்களுக்கு எதிரான அரசியல் போராட்டத்தில் மக்களுக்கு எதிரான போராட்டத்தை
நடத்த இவர்களை யார் தூண்டிவிடுவிடுவது? சட்டத்திற்கு எதிராக போராட்டம்
நடத்த இவர்களுக்கு யார் அனுமதி கொடுத்தது?